சேலம்:நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியருக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியது.
இதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 26 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர்.
அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் வழங்கி பாராட்டினார்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய ஆட்சியர் ராமன்," தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும் காலங்களிலும் மருத்துவராக விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த உள்ஒதுக்கீடு மிகப்பெரிய பாலமாக இருக்கும்.