கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ ராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பாதுகாப்பு முனெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் தொடந்து கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், நகைக்கடைகள், உணவு விடுதிகள், துணிக்கடைகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முறையாக தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.