இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக 31-08-2020 முடிய தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்த, பொதுஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் வருகின்ற 30.09.2020 வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே நடைமுறை சேலம் மாவட்டத்திலும் முழுமையாகப் பின்பற்றப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலை வாசஸ்தலத்திற்கு, வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ-பாஸ் பெற்றுதான் செல்ல வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இ-பாஸ் பெற்று ஏற்காடு மலை சுற்றுலா தலத்திற்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குவதோடு 144 தடை உத்தரவு காலம் வரை அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.