சேலம்:சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நேற்று (அக்.11) இறைச்சி கடைகள் மற்றும் அறுமனைகள் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது, “சேலம் மாவட்டத்தில் ஆரோக்கியமான முறையில் இறைச்சிகள் வாங்கிப் பயன்படுத்துவதை உறுதி செய்திடும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் 1,000 இறைச்சிக் கடைகள் மட்டும் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் - கல்லூரி முதல்வர் பெருமிதம்!
குறிப்பாக, கடைகளில் விற்கப்படும் இறைச்சிகள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பொதுமக்கள் பார்வையில் படும்படி கடைகளின் முன்புறம் இறைச்சிகளை காட்சிப்படுத்தக் கூடாது. பொது இடங்களில் இறைச்சிக்காக ஆடுகளை வெட்டுதல், இறைச்சிக் கடைகளில் துருப்பிடித்த கொக்கிகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் எஃகு போன்றவற்றால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தவும்.