இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளதாவது :
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் தொடர் நடவடிக்கையாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிப்பு செய்து அமல்படுத்தப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டும், கரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றியும் இயக்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்ற 17ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இச்சூழலில் கடந்த 6ஆம் தேதி முதல் சில தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு அரசாணை எண்.217, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 3ஆம் தேதி படி சில தளர்வுகளை அரசு வழங்கியது.
தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் நிறுவனங்கள் இயங்கலாம் - சேலம் மாவட்ட ஆட்சியர் - சேலம் ஆட்சியர் ராமன்
சேலம்: மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் நீங்கலாக அனைத்து பகுதிகளிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் 50 சதவிகித பணியாளர்களுடன் தனிநபர் இடைவெளியை பின்பற்றி முகக் கவசம் அணிந்து அரசு வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை முழுமையாக கடைபிடித்து இயக்கலாம்.
தற்போது அரசாணை எண்.238, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள். 15ஆம் தேதி படி மேலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள (தடைசெய்யப்பட்ட பகுதிகளை தவிர) ஏனைய மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் (ஜவுளித் தொழில்கள் உள்பட) 50 சதவிகித பணியாளர்களுடன் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 ஆயிரத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தனி அனுமதியினை பெற்று இயக்கலாம் என்ற கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் (தடைசெய்யப்பட்ட பகுதி தவிர) உள்ள ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் 50 சதவிகித வேலையாட்களுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 33 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து நிறுவனங்களுமே தனி நபர் இடைவெளியினை பின்பற்றியும், அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்தும், கிருமிநாசினிகளை தொடர்ந்து பயன்படுத்தியும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணித்து, அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை முழுமையாக கடைபிடித்து, மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் நீங்கலாக ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களையும் இயக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பல இடங்களிலிருந்து 3400 லிட்டர் கள்ளச்சாராயம்... வளைத்துப் பிடித்த காவல்துறை!