சேலம்:ஏற்காட்டில் நேற்று (மே14) இரவு பெய்த இடைவிடாத தொடர் கனமழையின் காரணமாக, ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலம் அருகே இரவு 8 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவு 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டதால் நேற்றிரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (மே15) காலை மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவு தீயணைப்பு துறையினர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மூலம் மண்சரிவு சரி செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று காலை முதல் வழக்கம்போல போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.