கரோனோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும்144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் முழுவதும் தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத் துறை சார்பில் 13 வகையான காய்கறிகள் அடங்கிய பைகளை நூறு ரூபாய்க்கு வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நூறு ரூபாய்க்கு அத்தியாவசிய பொருட்கள் இந்நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் தோட்டக் கலைத் துறை சார்பில் காய்கறிகள் பேக்கிங் செய்யும் முறையை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் காய்கறிகளின் தரம் குறித்தும் அளவு குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தோட்டக் கலைத் துறை சார்பில் 60 ரூபாய்க்கு மூன்று வகையான பழங்கள் விற்பனை செய்யும் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார். மேலும், பொதுமக்களுக்கு காய்கறிகள், பழ வகைகள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்திட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
சேலம் காய்கறி சந்தையில் ஆட்சியர் ஆய்வு இந்த ஆய்வின்போது, தோட்டக் கலைத் துறை இணை இயக்குனர், வேளாண் வணிகம் துணை இயக்குனர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை – நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்