சேலம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களுக்கான தேர்தல் பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி. அ.ராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளரான இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சி.காமராஜ், தலைமை வகித்தார்.
இது குறித்து காமராஜ் கூறுகையில்,"
"சேலம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, மாவட்ட காவல் துறையினரால் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் கண்டறியப்பட்ட பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யபடவுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள், மத்திய அரசு உடைமையாக்கப்பட்ட அலுவலகங்கள், நிறுவங்களில் பணிபுரியும் பணியாளர்களில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் இத்தேர்தலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படவுள்ளனர்.