தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் தலைமையில் சேலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை! - n Salem CM Headed Advisory Meeting

சேலம்: ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

By

Published : May 23, 2020, 2:28 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று இரவு சேலம் வந்தார்.

இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணி, நிவாரண உதவித் தொகை, குடிமராமத்துப் பணிகள், குடிநீர்த் திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மதியம் அவர் எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடத்துவார் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details