தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எகிறும் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை.. கட்டுமான பொறியாளர்கள் சங்க கோரிக்கை என்ன? - rising prices of construction materials

Salem News: மத்திய, மாநில அரசுகள் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும், சிண்டிகேட் முறையை ஒழிக்க வேண்டும் எனவும் சேலம் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 5:17 PM IST

சேலம்:சேலம் மேற்கு சிவில் இன்ஜினியர்ஸ் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக்.10) நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்டட பொறியாளர்களுக்கு தனியாக பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும், பதிவு பெற்ற கட்டுமான பொறியாளர்களுக்கு ஒரு மாவட்டத்தில் பதிவு செய்திருந்தாலும், ஒரே பதிவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் செயல்பட அங்கீகாரம் வழங்க வழிவகை செய்ய வேண்டும், புதிய வீடுகளுக்கு மின்சார இணைப்பு பெறும் நடைமுறையில் கட்டிட முடிவு சான்று பெறுவது போன்றவைகளை பொதுமக்கள் எளிமையாக பெற சட்ட திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எகிறும் கட்டுமானப் பொருட்கள் விலை; ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும்: இதை அடுத்து, இச்சங்கத்தின் நிறுவன தலைவர் செல்வகாந்தன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், 'தொடர்ந்து கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஏழை எளிய மக்கள் தங்களது இடத்தில் வீடுகூடக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்; இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தை முறைப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்' என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், 'தமிழக அளவில் இரும்பு கம்பிகள், பிரிக்ஸ் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் மூலப்பொருள் விலை ஏற்றம் இல்லாத சூழலில் கட்டுமானப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தினர், தனித்தனியே சிண்டிகேட் அமைத்துக் கொண்டுப் பொருட்களின் விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளனர்' என்று குற்றம் சுமத்தினார்.

சிண்டிகேட் முறையை ஒழிக்கவும்: 'இதனால், அரசு கட்டடங்கள் கூட கட்ட முடியாத சூழல் உள்ளது. 500 அடி பரப்பளவில் ஏழை எளிய மக்கள் கூட வீடு கட்ட முடியாத சூழலில் உள்ளனர். இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு சிண்டிகேட் முறையை ஒழிக்க வேண்டும், கட்டுமானப் பொருட்களின் விலையை அரசின் கட்டுப்பாட்டிலேயே வைக்க வேண்டும். இதேபோல், தமிழகம் முழுவதும் ஒரே நடைமுறையில் கட்டட அனுமதி பெறும் நடைமுறை உள்ளது. இதனால், ஆன்லைன் இணையதளம் சரியாக இயங்காமல் உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதனை சரிசெய்து மக்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.. குடிக்காடு கிராம விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ABOUT THE AUTHOR

...view details