தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக கூட்டணிக்கு கிறித்தவ கூட்டமைப்பினர் ஆதரவு - திமுக கூட்டணி

சேலம்: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறித்தவ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு

By

Published : Apr 13, 2019, 9:59 PM IST

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கிறித்தவ கூட்டமைப்பு மற்றும் கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சாந்தி பிரேம்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் மதவெறி சக்திகள் அதிகாரத்தைப் பிடித்தால் அது ஜனநாயகத்திற்கு முடிவு கட்டக்கூடும். இந்திய அரசியல் சாசனம் சிதைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஒரே வழி மதவாத சக்திகளின் கூட்டணியை தோற்கடிப்பதேயாகும். இந்த நோக்கத்திற்காக தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது என்று ஒட்டுமொத்த கிறிஸ்த்தவர்கள் முடிவு செய்து இருக்கிறோம். தங்களது இந்த முடிவு ஒட்டுமொத்த கிறித்தவ மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details