சேலம்:தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் சேலம் மரவனேரி பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் அருள் என்பவரின் 11 வயது மகன் சரண் தேவ், இன்று (ஜன.2) பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி கண்களை கட்டிக்கொண்டு 20 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் பயணம் இந்த சைக்கிள் பயணத்தை சேலம் வடக்கு காவல் துணை ஆணையாளர் மாடசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அடிவாரம் பகுதியில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம் வழியாக 20 கிலோ மீட்டர் தூரம் கடந்து காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு செய்தார். 1 மணி நேரம் 3 நிமிடம் 26 வினாடிகளில் இந்தச் சாதனையை சிறுவன் புரிந்துள்ளார்.
சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் பயணம் சிறுவனின் சாதனையைப் பாராட்டி நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் உலக சாதனை பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனை வடக்கு காவல் துணை ஆணையாளர் மாடசாமி சிறுவனுக்கு வழங்கி கௌரவித்தார். இதுமட்டுமில்லாது சிறுவன் சரண் தேவ், பல்வேறு சாதனைகள் புரிந்து பதக்கம், சான்றிதழ்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்!