சேலம் மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தனர். இதற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் இருந்து 18 ஆயுள் தண்டனை கைதிகள் பரோலில் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, பெரும்பாலான கைதிகளின் உறவினர்கள் சேலம் மத்திய சிறைக்கு நேற்று அதிகாலையிலேயே வந்து கைதிகளை அழைத்துச் சென்றனர்.