சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த ஆட்டுக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான் (56). இவர் கஞ்சா விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
முகமது மீரானுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, சிறை மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக முகமது மீரானை அரசு மருத்துவமனைக்கு சிறைத்துறையினர் அனுப்பி வைத்தனர்.