சேலம் தொழிற்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக பங்க்கில் இருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் பங்க் அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர் - பெட்ரோல் பங்க் அருகே டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து எரிந்தது
சேலம்: தொழிற்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் அடுத்தடுத்து பரபரப்பு
பங்க் ஊழியர்களின் பல மணி நேர போராட்டத்திற்குபின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊழியர்களின் இந்த சமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.