சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சேலம் தாதகாபட்டி கேட், அக்ரஹாரம், வின்சென்ட் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நல்லவர்களை கொண்ட தர்மத்தின் கூட்டணியாக அதிமுக கூட்டணி அமைந்துள்ளது.
‘புரோட்டா-பியூட்டி பார்லர் கடைக்காரர்களை மிரட்டுவதுதான் திமுகவின் வேலை’ - ஓபிஎஸ்
சேலம்: மத்திய ஆட்சியில் பத்தாண்டு காலம் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
மத்திய ஆட்சியில் பத்தாண்டு காலம் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. உருப்படி இல்லாத சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து 40 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை கடலில் போட்டு வீணடித்தார்கள். ஆனால், காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான்.
திமுக கடந்த ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியில் வன்கொடுமை என அனைத்து சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததால் கடந்த தேர்தலில் மக்கள் திமுகவை புறக்கணித்தனர். மேலும், புரோட்டா கடைக்காரர்களை மிரட்டுவது, பியூட்டி பார்லரில் பெண்களை எட்டி உதைப்பது போன்ற அராஜகப் போக்கில் ஈடுபடுவதுதான் திமுகவின் நோக்கமாக உள்ளது. முன்பெல்லாம் உணவகங்களில் உண்ட பிறகுதான் பணம் கேட்பார்கள், ஆனால் திமுகவினரின் அராஜகத்திற்கு பிறகு முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டுதான் உணவு வழங்குகிறார்கள். அந்த அளவிற்கு திமுகவினர் அராஜகங்களை நடத்தியுள்ளனர் என்று கிண்டலடித்தார்.