கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவானது தற்போது சில தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் பல்வேறு இழப்புகளை சந்தித்த ஏழை-எளிய மக்கள் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் சமூக பொறுப்புணர்வு உள்ள தனிநபர்கள் சார்பிலும் பல்வேறு வகையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாநகரில் இயங்கிவரும் பெடரல் வங்கியின் கிளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் ரூ. 12 லட்சம் மதிப்பில் உணவு, மருத்துவ உதவிகளை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.
இது குறித்து பெடரல் வங்கியின் சேலம் கிளை மேலாளர் முத்து பிரகாஷ் அளித்த பேட்டியில், "சேலம் அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர் (நோயாளிகளை அழைத்துச் செல்லும் நாற்காலி) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பெடரல் வங்கி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மாநகர காவல் துறையினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உதவியாக ரூ. 2 லட்சம் மதிப்பிலான பேரி கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.