தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா - பாஜகவினர் பாதயாத்திரை! - சேலம் செய்திகள்

சேலம்: காடையாம்பட்டி தாலுகாவில் பாஜக சார்பில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக விழிப்புணர்வுப் பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

Salem BJP ians participated in Rally

By

Published : Oct 10, 2019, 11:55 PM IST

அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாடுமுழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி விழிப்புணர்வு பாதயாத்திரை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில், பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் விதமாக சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த யாத்திரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தேச ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றியும், மழைநீரை சேமிப்போம் போன்ற கோஷங்களையும் எழுப்பினர். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக சென்று இறுதியாக சின்னதிருப்பதியை வந்தடைந்தனர்.

இதையும் படிங்க:

#DeathanniversaryofAachi - ஆல் டைம் கல்ட் கிளாசிக் நாயகி மனோரமா!

ABOUT THE AUTHOR

...view details