தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து! - udayapatti lorry accident

சேலம்: உடையாப்பட்டி பைபாஸ் பகுதியில் லூப்ரிகன்ட் ஆயில் கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

lorry
lorry

By

Published : Sep 27, 2020, 7:01 PM IST

சென்னையிலிருந்து லூப்ரிகன்ட் ஆயில் நிரப்பிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பவானி பகுதி நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பைபாஸ் பகுதியில், டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை வேகமாக சென்று சாலையின் ஓரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த லூப்ரிகேண்ட் ஆயில் வெளியே கொட்டி ஆறாக ஓடியது. இந்த விபத்தினால் தீ விபத்து ஏற்படும் எனக் கருதிய அம்மாபேட்டை காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் இடத்தில் காவல்துறையினர்
நுரை கலவையை டேங்கர் லாரியின் மீது கொட்டினர்
சம்பவ இடத்திற்கு வந்த சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் நுரை கலவையை டேங்கர் லாரியின் மீது கொட்டினர். இதனால் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி, கிளீனர் நவீன் குமார் ஆகியோர் லேசான காயத்துடன் விபத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
லாரி மீட்கப்பட்டபோது
இந்த டேங்கர் லாரி விபத்து காரணமாக சென்னை - வேலூர் செல்லும் பாதையில் கார், கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக உடையாப்பட்டி பைபாஸ் பிரதான சாலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details