தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் கைது! - பாலியல் தொல்லை உதவி பேராசிரியர் கைது

சேலம் வழியே ஓசூர் சென்ற ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Harrasment
பேராசிரியர் கைது

By

Published : May 31, 2023, 2:09 PM IST

சேலம்:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வனிதா (வயது 27) என்ற இளம்பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம், விடுமுறையில் வனிதா சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பின்னர், விடுமுறை முடிந்து கடந்த 29ஆம் தேதி இரவு மீண்டும் ஓசூருக்கு புறப்பட்டார். ராமநாதபுரம் - ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வனிதா அவரது தந்தை சரவணனுடன் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது!

அந்த ரயில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, வனிதாவின் இருக்கைக்கு மேலே இருந்த இருக்கையில் படுத்திருந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கீழே இறங்கியுள்ளார். அந்த நபர் வனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சிடைந்த வனிதா சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த ரயில் பயணிகள் பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து வைத்து, சேலம் சந்திப்பு ரயில் நிலையம் வந்ததும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ந்த கதை - ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு சிஆர்பிஎப் வீரர் பாலியல் தொல்லை!

இதையடுத்து, காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் மற்றும் ரயில்வே போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது பெயர் சையது இப்ராஹிம் (வயது 57) என்பதும், அவர் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள பாரதிநகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர், சேலம் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்தது. பிறகு, சையது இப்ராஹிம் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பிறகு அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் கடந்த 2ஆம் தேதி, ஓடும் ரயிலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். கர்நாடகாவிலிருந்து ஆந்திரா செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்தது. கணவருடன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணை, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். சிஆர்பிஎப் வீரர் மதுபோதையில் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎப் வீரரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: வேலை தருவதாக ஏமாற்றி, கத்தி முனையில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு..

ABOUT THE AUTHOR

...view details