சேலம் மாநகர காவல் துறை சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் அதிக வெப்பநிலையைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றன.
கோடையை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய காவல் உயர் அலுவலர்! - சேலம் மாநகர உதவி காவல் ஆணையர்
சேலம்: கோடைக்காலங்களைச் சமாளிக்க போக்குவரத்து காவல் துறையினருக்குத் தேவையான உபகரணங்களை மாநகர காவல் அலுவலர் வழங்கினார்.
Salem assistant commissioner
அந்த வகையில், இந்த ஆண்டு கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து போக்குவரத்து காவல் துறையினர் தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
அதன்படி சேலம் மாநகர காவல் துறையினர் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, மோர், இளநீர் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவுகள், கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையிலான உபகரணங்களைப் போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி வழங்கினார்.