இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலை மற்றும் கலாசார பண்பாட்டிற்கான இந்திய தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், "ஆடை அணிகலன் மனித கலாசாரத்தின் முக்கிய அங்கமாகும். அந்தவகையில் சேலத்தில் வெள்ளி ஆபரணங்கள் வரலாற்று சிறப்புமிக்கது. மிகவும் பழமையான பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.
நூற்றாண்டுகள் கடந்து இன்றும் சேலம் கொலுசு உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெண்கள் விரும்பி அணியும் வெள்ளி ஆபரணங்களில் சேலம் கொலுசு முதலிடம் வகிக்கிறது.