சேலம்:சேலம் மாவட்டம் அம்மாபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் (நவ.1) நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
300 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு கொடி என்று கூறி சீமான் ஒரு கொடியை திருமண மண்டப வளாக மின் கம்பத்தில் ஏற்றி வைத்தார்.
இந்த தகவலை அறிந்த அம்மாபேட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் தமிழ்நாடு கொடி
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அனுமதியின்றி கூட்டம் நடத்துவது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அம்மாபேட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்த வருகின்றனர்.
இதையும் படிங்க: டெங்கு பாதிப்பு: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களுக்கு விரைந்தது மத்திய குழு