தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமியர்களிடம் வாக்குச் சேகரித்த சேலம் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர்! - TN Assembly

சேலம்: இஸ்லாமியர்களிடம் சேலம் வடக்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜி. வெங்கடாஜலம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

salem north
சேலம் வடக்கு

By

Published : Mar 27, 2021, 1:09 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜாமியா மஸ்ஜித் முன்பு, தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம், சேலம் வடக்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் ஜி. வெங்கடாஜலம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுகவினர் கொடுத்த துண்டுப் பிரசுரங்கள்

இதையும் படிங்க:பள்ளப்பட்டி சம்பவம்: அண்ணாமலைக்கு ஆதரவாகக் களமிறங்கிய அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!

ABOUT THE AUTHOR

...view details