சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வேட்பாளர்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இன்று சேலம் அருகே மல்லமூப்பம்பட்டி, குமரன் நகர், குமரன் வட்டம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் சாந்தி ராஜ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண்கள் கிராம பகுதிகளில் தெருத்தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.