தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடி தேங்காய் சுடும் விழா: பூரண பொருட்கள் விற்பனை அமோகம் - salem

சேலம்: சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆடி தேங்காய் சுடும் விழா

By

Published : Jul 17, 2019, 4:53 PM IST

ஆடி மாதத்தின் முதல் நாளான நேற்று சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இது மகாபாரத நிகழ்வின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. நரகாசுரனின் தலையை கிருஷ்ணன் கொய்த நிகழ்வை மையமாக வைத்து இந்நாள் நினைவு கூறப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் ஆடி மாதத்தினை பண்டிகை மாதமாக கருதுகின்றனர்.

இவ்விழாவிற்காக தேங்காய்க்குள் அவல், கடலை, வெல்லம், எள், அரிசி, ஏலக்காய், நீர் சேர்த்து அழிஞ்சி மரக்குச்சியினால் மூடுவர். தேங்காய் ஓடு நெருப்பில் வெடிப்பது தர்மம் நிலைத்து அதர்மம் நொறுங்க வேண்டும் என்பதை குறிக்கிறது. இது இன்றுவரை சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாக கொங்கு மண்டலங்களில் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்நிகழ்விற்கு தேவையான பொருட்களை மக்கள் சிரமமின்றி வாங்க சேலம் பட்டைக் கோயில், சின்ன கடைவீதி, பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சந்தைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனால், தேங்காய் சுடுவதற்கு தேவையான அழிஞ்சி மரக்குச்சிகள், தேங்காய்கள், ஏலக்காய், வெல்லம் போன்ற பொருட்களை பொது மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். இந்த சிறப்பு ஏற்பாடுகள் காரணமாக விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details