சேலம் அடுத்த உள்ள கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள புது ஏரியில் தொடர் மழை காரணமாக நீர் நிரம்பி உள்ளது. இந்தப் பகுதியில் வசித்துவரும் சிலர் வீட்டு மனைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
முழுமையாக கவிழ்வதற்கு முன் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாரியில் இருந்து வெளியேறி நல்வாய்ப்பாக உயிர் தப்பி கிணற்றின் மேலேறி வந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்தனர். இததனால் பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர் லாரி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு மூன்று கிரேன்களை அழைத்து வந்தார். பிறகு சுமார் 4 மணி நேரம் போராடி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து மூழ்கிய லாரியை மேலே, கிரேன் மூலம் தூக்கி நிறுத்தினர்.