தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் மேடை நடனக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம்: கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி மேடை நடனக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Feb 3, 2021, 3:12 PM IST

மேடை நடன கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
மேடை நடன கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் நடத்த அரசு தடை விதித்தது. இதனால் சுமார் 1 லட்சம் மேடை நடன கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. குறிப்பாக சினிமா படப்பிடிப்பு, திரை அரங்குகள் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேடை நடனக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஆனால் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் அரசு அனுமதி வழங்கக்கோரி மேடை நடனக் கலைஞர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மேடை நடனக் கலைஞர் வெங்கடேசன் கூறுகையில், "கடந்த 9 மாதங்களாக வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவல் துறை, திரைப்பட நடன கலைஞர்களின் கரோனா விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details