தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசைக் கண்டித்து புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் மத்திய அரசு

சேலம்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து இன்று புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

socialist party
socialist party

By

Published : Feb 18, 2020, 4:52 PM IST

சேலம் நாட்டாண்மை கழக கட்டடம் அருகில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவானந்தம், "எல்ஐசி உட்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி நாட்டில் நிலவும் வேலையின்மையை போக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 21,000 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.

சேலத்தில் சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு ,தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேடுகள் மூலம் மக்களை பிளவுப்படுத்துவதை ஆளும் மத்திய அரசு கைவிட வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: பற்றி எரிந்த பேருந்து - பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details