தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆர்.எஸ். பாரதியை கண்டிப்பதுதான் ஸ்டாலினுக்கு அழகு' - முதலமைச்சர் அறிவுரை - RS Bharathi arrest does not matter goverment

சேலம்: ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

By

Published : May 23, 2020, 3:47 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில், சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "பட்டியலின மக்களை அவதூறாகப் பேசிய காரணத்திற்காக திமுகவின் ஆர்.எஸ். பாரதி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசுக்கு எந்தத் தொடர்புமில்லை. அவதூறு பரப்புவதற்காகவே வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எங்களைத் தொடர்புப்படுத்தி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் இப்படிப்பட்ட இழிவான பேச்சைப் பேசியவுடன் அவர் (ஸ்டாலின்) கண்டித்திருக்க வேண்டும். அதுதான் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு. அதைவிடுத்துவிட்டு மற்றவர் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துக்கொள்வது எந்தவிதத்தில் நியாயம் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்" என்றார்.

மேலும் அவர், "கரோனோ வைரஸ் (தீநுண்மி) நோய்த்தொற்றை தடுக்கும்வகையில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன.

கோடைகாலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்திலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆரின் கனவுத் திட்டம். அதனை ஜெயலலிதா தொடர்ந்து செயல்படுத்திவந்தார். அதேபோல தொடரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் சேலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details