தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓமலூர் சுங்கச்சாவடியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல் - சேலம் தற்போதைய செய்தி

சேலம்: ஓமலூர் அருகேயுள்ள சுங்கச்சாவடியில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள் மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஓமலூர் சுங்கச்சாவடியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்
ஓமலூர் சுங்கச்சாவடியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்

By

Published : Dec 12, 2020, 3:30 PM IST

பெங்களூருவிலிருந்து சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு போதை பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து ஆய்வாளர் சரவணன் தலைமையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் இன்று (டிசம்பர் 12) காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, சோதனை செய்தனர்.

அதில் 20 மூட்டைகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகளும் 20 பெட்டிகளில் பான் மசாலாக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பெங்களூருவிலிருந்து ஆத்தூருக்கு தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா பாக்கெட்டுகள் கடத்திச் சென்ற ஆத்தூரை சேர்ந்த மனோகரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஓமலூர் சுங்கச்சாவடியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் கருப்பூர் காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு - 9.17 லட்சம் ரூபாய் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details