சேலத்தில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் மூலம் 100 கிராம், ஜவ்வரிசி வழங்கிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் பேசிய சபையின் தலைவர் தமிழ்மணி பேசுகையில்,"சங்க உறுப்பினர்களின் பங்குத் தொகைக்கு 14 விழுக்காடு பங்கு ஈவுத்தொகை வழங்குவதற்காக, மின்னணு ஏல மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததால் அனைத்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு உற்பத்தியாளர்களுக்கும், லட்சக்கணக்கான மரவள்ளி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் புத்துயிர் கிடைத்துள்ளது.
சேகோசர்வ் உறுப்பினர்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையான நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விநியோகத்தை, முதல் கட்டமாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் 100 கிராம் ஜவ்வரிசியை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.