தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் ரூ‌. 40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - வாகனத் தணிக்கை

சேலம் அருகே நடந்த வாகனத் தணிக்கையில் இரண்டு வாகனத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று (ஜூலை 18) பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் ரூ‌. 40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சேலத்தில் ரூ‌. 40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

By

Published : Jul 19, 2021, 9:18 AM IST

சேலம்: சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ராமலிங்கபுரம் பிரிவு பகுதியில் நேற்று (ஜூலை 18) அதிகாலை சேலம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து சேலம் வழியாக மதுரைக்கு செல்ல இருந்த மகேந்திரா பொலிரோ பிக்கப் வாகனம், டாடா லோடு மினி லாரி ஆகிய இரண்டு வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் 400 கிலோ உலர்ந்த கஞ்சா இலை மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

4 பேர் கைது

ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆண்டிச்சாமி, தனபாக்கியம், அழகேசன் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் மூலம் கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details