சேலம் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வணிக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 178 கடைகளின் ஒப்பந்ததாரர்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை பணம் கட்டாமல் இருந்து வந்துள்ளனர். இதனால், மாநகராட்சி அலுவலர்கள் பலமுறை அவர்களுக்கு வாடகை பாக்கித் தொகையை கட்ட நோட்டிஸ் அனுப்பி வந்தனர்.
இருந்தும், அவர்கள் பாக்கித் தொகையை கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால் ரூ.15 கோடி வரை வாடகை பாக்கி அதிகரித்து விட்டது. இதனால், இன்று காலை 178 கடைகளுக்கும் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக சீல் வைத்தனர். மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி, கொண்டலாம்பட்டி உதவி ஆணையாளர் ரமேஷ் பாபு தலைமையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.