தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Southern Railway: 9 மாதத்தில் பயணிகளிடம் ரூ.12 கோடி அபராதம் வசூல்! - தெற்கு ரயில்வே அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த நபர்களிடம் இருந்து ரூ.12.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Jan 12, 2023, 8:21 AM IST

Updated : Jan 12, 2023, 1:02 PM IST

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்கள், பதிவு செய்யாத சரக்குகளை எடுத்துச் செல்பவர்கள், சாதாரண வகுப்பு பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு உயர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களைப் பறக்கும் படையினர் சோதனை செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டங்களில் பயணச்சீட்டு சோதனையில் ரூ.12.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 இதே காலகட்டத்தில் ரூ.7.24 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது முந்தைய ஆண்டை காட்டிலும் சுமார் ரூ.5.01 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2022-ல் அபராதத்தொகை வசூல் சுமார் 69.29 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 2022 ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலக்கட்டங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 1,63,636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.11.33 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. முறையற்ற பயணம் செய்ததாக 17,770 வழக்குகள் பதிவு செய்து ரூ.89.76 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்துச் சென்றதாக 432 வழக்குகள் பதிவு செய்து ரூ.2.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அந்தவகையில் பயணச்சீட்டு சோதனையில் மொத்தம் ரூ.12.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வினோத முறையில் வெள்ளப்பூண்டு திருட்டு.. பலே திருடன் சிக்கியது எப்படி?

Last Updated : Jan 12, 2023, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details