தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது - சேலம் அண்மைச் செய்திகள்

சேலம்: போலி வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனம் நடத்தி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போலி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி, ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்த விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி, ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்த விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

By

Published : Mar 19, 2021, 8:16 AM IST

சேலம் மாவட்டம், கோட்டை, அழகாபுரம் பகுதிகளில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், ஆறு லட்சம் மதிப்பிலான கார், 10 ஆயிரம் கொடுத்தால் மோட்டார் சைக்கிள், குறைந்த அளவு பணம் கட்டினால் தங்கம், வெள்ளி காசுகள் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டன.

இதனை நம்பி சேலம், நாமக்கல் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணம் கட்டி உள்ளனர். மேலும், 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தவர்களிடத்தில் வரி செலுத்த வேண்டும், டெலிவரி சார்ஜ் கொடுக்க வேண்டும் என மேலும் பணத்தை வசூலித்துள்ளனர். ஆனால், விளம்பரத்தில் அறிவித்தபடி கார் கொடுக்கவில்லை. இதேபோல் மற்ற அறிவிப்புகளுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளாக பணத்தை பெற்றுக் கொண்டு, எந்த பொருள்களையும் வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையிடம் நேற்று (மார்ச்.18) புகார் அளித்தனர். அதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு 100 கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் தலைமறைவாகினர். தலைமறைவான நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், போலி விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜ், வெங்கடேசன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மோசடியில் உடந்தையாக செயல்பட்ட நபர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க :சூர்யகுமார் முதல் அரைசதம்: இந்தியா 185 ரன்கள் குவிப்பு

ABOUT THE AUTHOR

...view details