சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தேவன் பிரகாசம். இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் உள்ளார்.
இந்நிலையில், பிளேடால் கழுத்தை அறுத்து தேவன் பிரகாசம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், கழுத்துப் பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்ட அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.