சேலம் மாநகரம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி சரவணன்(35). இவர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழிப்பறி, கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் சேலத்தில் உள்ள ரவுடி பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து சரவணன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், சரவணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு சூரமங்கலம் காவல்துறையினர் பரிந்துரைத்தனர்.
அதையேற்று சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டதால், ஆத்தூர் கிளை சிறையில் உள்ள சரவணன் மீது குண்டர் சட்டம் பாய்ந்து மீண்டும் அவரது சிறைத் தண்டனைக்காலம் அதிகரிக்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் கைதான பிரபல ரவுடி! - சேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
சேலம்: தொடர் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ரவுடி சரவணன்
இதையும் படிங்க:புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு: பெண் மந்திரவாதி கைது