திருந்தி வாழ உறுதிமொழி ஏற்ற ரவுடிகள் - ரவுடிகள் உறுதிமொழி
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகுவோம், குற்றச் செயல்களை தூண்டும் வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .
![திருந்தி வாழ உறுதிமொழி ஏற்ற ரவுடிகள் Rowdies taking pledge to lead a good life](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10161076-970-10161076-1610077859243.jpg)
சேலம்: குற்றச்செயலில் தொடர்புடைய 57 நபர்கள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சேலம் மாநகரப் பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் திருந்தி வாழ சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் மனு வழங்கினர்.
இதனையடுத்து மாநகர காவல் ஆணையாளர் த.செந்தில்குமார் உத்தரவின்பேரில், சேலம் மாநகர துணை ஆணையாளர் சந்திரசேகர் முன்னிலையில் நேற்று இரவு, குற்றச்செயல்களில் தொடர்புடைய 57 பேர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம், சண்டை சச்சரவுகளில் ஈடுபட மாட்டோம், பணம் பெற்றுக்கொண்டு அடியாட்கள் வேலையில் ஈடுபடமாட்டோம், பணத்திற்காக யாரையும் கடத்தி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடமாட்டோம், கட்டப்பஞ்சாயத்து செய்யமாட்டோம், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகுவோம், குற்றச் செயல்களை தூண்டும் வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயலிலும் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .
அதனைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் அவர்களுக்கு மனம் திருந்தி வாழ அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தனர்.