தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

44 ரவுடிகள் கைது: சேலம் காவல்துறை அதிரடி - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர்

சேலம்: மாவட்ட காவல்துறை அலுவலர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இன்று 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறை
காவல்துறை

By

Published : Nov 9, 2020, 3:04 AM IST

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர் உத்தரவின்பேரில் இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர் கூறுகையில்," பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 40 விடுதிகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


மேலும், சுமார் 1,640 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. சாலைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 13 பேரும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 43 பேரும் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளோடு சேர்த்து, சுமார் 1,014 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகை கடைகள், ஜவுளி கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், சேலம் மாவட்டத்தில் 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 81 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு பிரிவு மூலம் மேலும் 48 பேர் கைதாகினர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details