சேலம் நான்கு ரோடு பகுதியில் பிரபல தனியார் மருந்தகம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் 10 மணியளவில் மருந்தகத்தினை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர்.
இதையறிந்த, கொள்ளையர்கள் ஷட்டரின் பூட்டை உடைத்து கடையிலிருந்து ரூ.18 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்த சிசிடிவி காட்சியில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடுவது பதிவாகியுள்ளது.
இதேபோல், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே நாமக்கல் மாவட்டம் பெரியமணலியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அரிசி மண்டி வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் தொழிலாளர்கள் அரிசி மண்டியை பூட்டி விட்டு சென்றதை அறிந்த கொள்ளையர்கள் ஷட்டரின் பூட்டு உடைத்து ரூ.12 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கடைகளில் வைக்கப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளை சம்பவ சிசிடிவி காட்சிகள் மேலும் ஒரே இரவில், 24 மணி நேரமும் ஆள் நடமாட்டமுள்ள, பரபரப்பான சாலையில் உள்ள இரண்டு கடைகளின் ஷட்டரை உடைத்து துணிகர கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்த போலி போலீஸ்!