தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி 17 சவரன் நகை திருட்டு! - அதிர்ச்சியில் மருத்துவர் குடும்பம் - சேலத்தில் மருத்துவர் வீட்டில் 17 சவரன் நகை கொள்ளை

சேலம்: பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தி பல் மருத்துவர் வீட்டில் 17 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கொள்ளை நடந்த மருத்துவர் வீடு
கொள்ளை நடந்த மருத்துவர் வீடு

By

Published : Jan 20, 2020, 7:16 PM IST

Updated : Jan 20, 2020, 7:44 PM IST

அழகாபுரம் பகுதியிலுள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் சந்தோஷ்குமார். இவர் அரியானூர் பகுதியில் இருக்கும் விநாயகா மிஷன் மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் மும்பைக்குச் சென்றிருந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட திருடர்கள், மருத்துவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 17 சவரன் நகைகள், 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

மும்பை சென்ற மருத்துவர் குடும்பம், இன்று வீடு திரும்புகையில், வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது நகைகள், பணம், மடிக்கணினி உள்ளிட்டவைகள் திருடுபோனது தெரியவந்தது.

திருட்டு நடந்த மருத்துவர் வீடு

இது குறித்து, மருத்துவர் சந்தோஷ்குமார் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காட்பாடி அருகே ரூ.3 லட்சம் திருட்டு: மருத்துவர் வீட்டில் கைவரிசை

Last Updated : Jan 20, 2020, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details