தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினருக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் புகார் - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சாலையோர வியாபாரிகள்

சேலம்: சாலையோர வியாபாரிகளை காவல் துறையினர் ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் சேலம் சாலை வியாபாரிகள் புகார் மனு அளித்தனர்.

வியாபாரிகள்

By

Published : Jun 9, 2020, 3:58 AM IST

கரோனோ நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் மாநகர் பகுதியில் சாலையோரம் பழக்கடைகள், காய்கறிக் கடைகள், பூக்கடைகள் வைத்து வியாபாரம் செய்துவந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

மேலும் பழமை வாய்ந்த வ.உ.சி மார்க்கெட் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அந்த மார்க்கெட் பகுதியின் வெளியே சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருந்த நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று சென்றனர். அவர்களை வாயிலின் வெளியே காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாலையோர வியாபாரிகள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சேலம் டவுன் காவல் துறையினர் அனைவரின் சார்பாக மூன்று பேரை மட்டும் உள்ளே அனுமதித்து மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் கோரிக்கை மனுவை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து சாலையோர வியாபாரிகள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

இதுதொடர்பாக பேட்டியளித்த சாலையோர வியாபாரிகள் கூறுகையில், " காவல் துறையினர் வ.உ.சி மார்க்கெட் எதிரில் பூக்கடை பழக்கடை வைத்திருக்கும் எங்களை தினமும் தரக்குறைவாக ஆபாசமாக பேசி கடையை எடுக்க சொல்லி வலியுறுத்துகின்றனர்.

ஆனால் எல்லாக் கடைகளையும் சேலத்தில் திறக்கச் சொல்லும் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் எங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை. இதனால் இரண்டு மாதங்களாக எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். மாவட்ட நிர்வாகம் உடனே எங்களுக்கு உரிய விதிமுறைகளைக் வலியுறுத்தி அளித்து சாலையோரத்தில் கடைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details