தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலைப் பாதுகாப்பு வார விழா: மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி - Road Saftey Week - College, school students participate

சேலம்: 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி கல்லூரி,பள்ளி மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

rally
rally

By

Published : Jan 21, 2020, 3:28 PM IST

தமிழ்நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கி 27ஆம் தேதிவரை நடக்கிறது. சாலைப் பாதுகாப்பு வாரவிழாவின் இரண்டாவது நாளான இன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வள்ளுவர் சிலை, அக்ரகாரம் பிரதான சாலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கிற்கு சென்றடைந்தது.

மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாலைப் பாதுகாப்பு வாரவிழா: 500 மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

ABOUT THE AUTHOR

...view details