சேலத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆரோக்கிய விழிப்புணர்வு ஆய்வுக் கருத்தரங்கம் நடந்தது. இதில் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் பங்கேற்று, சாலை விதிகள் விழிப்புணர்வு குறுந்தட்டு மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.
'ஹெல்மெட் அணிவதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை..!' - கமிஷனர் சங்கர் - காவல்துறை ஆணையர்
சேலம்: 'சேலம் மாநகரில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதற்கு முக்கியத்துவம் அளிக்காதது வருத்தமளிக்கிறது' என்று சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "சேலம் மாநகரில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் சேலம் மாநகர மக்கள் ஹெல்மட் அணிய முன் வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. 2018ஆம் ஆண்டு சாலை விபத்தில் 215 பேரும், குற்றங்கள் மற்றும் கொலை சம்பவங்களில் 75 பேரும் உயிரிழந்தனர். ஆனால் இந்த வருடம் 45 பேர் மட்டுமே சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர்பலியைக் குறைப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.