தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: புரட்சிகர சோசலிச கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர சோசலிச கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புரட்சிகர சோசலிச கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
புரட்சிகர சோசலிச கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 6, 2020, 12:16 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புரட்சிகர சோசலிச கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும் அதற்கு துணை போன தமிழ்நாடு அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜீவானந்தம் கூறுகையில்," அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கிற சட்டம்.

இதன் மூலம் கார்ப்பரேட்டுகளிடம் விவசாயத்தை மத்திய அரசு ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. புதிய வேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் இந்திய விவசாயிகளுக்கு கருப்பு தினம்.

இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரையில் புரட்சிகர சோசலிச கட்சி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: தேனியில் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details