தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மகளிர் உரிமைத் தொகையால் எங்களுக்குத் தான் பிரச்சினை"- திடீர் போர்க் கொடி தூக்கிய வருவாய்த்துறை.. என்ன காரணம்? - etv tamil news

revenue officers demands: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தனிப் பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் என வருவாய்த் துறையினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

tn govt revenue officers association demands
tn govt revenue officers association demands

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 10:51 AM IST

tn govt revenue officers association demands

சேலம்:கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிய பணியாட்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் முருகையன் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மண்டல பயிலரங்கம் சேலம் அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில், சேலம், நாமக்கல், தர்மபுரி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் முருகையன் கூறுகையில், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பணிகள், வருவாய்த் துறையினர்களுக்கு அதிக பணி சுமையாக உள்ளது. இந்த திட்டத்திற்கு சிறப்பு பணியிடங்களை உருவாக்கி அதன் மூலம் அந்த திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை அரசியல் உள்நோக்கதோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தனி வட்டாட்சியர் பணி இடைநீக்கம் ரத்து செய்யபட்டலும், போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீது காவல்துறை நடவடிக்கை என்பது ஆங்காங்கே ஏவப்பட்டு உள்ளது. மேலும் பொய் வழக்கு புனையப்பட்டு உள்ளது.

அரசின் நலதிட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் வருவாய்த்துறை அலுவலரின் நலம் கருதி குற்றவியல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் தமிழக முதலமைச்சர், மற்றும் துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அண்மை காலமக அரசு அலுவலர்கள் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர், பணி சுமையின் காரணமாக தற்கொலைக்கு செய்து கொண்டுள்ளர். மேலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இந்த திட்டத்தின் பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் செயல்படுத்துவது பெரும் பணி சுமையாகவே உள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உடனடையாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிய பணியாட்களை நியமிக்க வேண்டும்" என்று முருகையன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஏற்கனவே 5 குழந்தைகள்; 6-ஆவதாக பிறந்த குழந்தையை கொன்ற கர்ப்பிணி.. தஞ்சையில் நிகழ்ந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details