தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட சமூக நீதி தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் 170ஆவது நினைவுநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இரட்டைமலை சீனிவாசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள்! - Rettamalai Srinivasan
சேலம்: இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளை முன்னிட்டு, சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Rettamalai Srinivasan 170th memorial day
அந்தவகையில், இன்று சேலம் அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள அம்பேத்கர் சிலையின் முன் இரட்டைமலை சீனிவாசனின் உருவப்படம் வைத்து, அவருக்கு மலர்த்தூவி மாலை அணிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் இமயவரம்பன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.