வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லுபவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் என்பது ஏராளம். சில சம்பவங்கள் பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தெரியாமலேயே போய்விடுகின்றன. சில சம்பவங்கள் சிரமமான முறையில் மற்றவர்களின் கண்களில் பட்டு பின்பு பிரச்னையில் உள்ளவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். இதுபோன்ற பல இன்னல்களை கடந்து தற்போது திருச்சி இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.
மலேசியா கோலாலம்பூர் செந்தூல் ராயாவில் செயல்பட்டுவரும் தனியார் உணவகம் ஒன்றில் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் சாகிர் உசேன் பணியாற்றிவந்துள்ளார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஜாகிர் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சம்பளமே வழங்காமல் அவரை உணவகத்தில் வேலைசெய்ய உணவக உரிமையாளர்கள் துன்புறுத்தியதாகவும் அதனால்தான் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஜாகீர் உசேன் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வீடியோவாக பதிவிட்டு வாட்ஸ்அப் மூலம் திருச்சியில் உள்ள சகோதரர் சதாமுக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, சதாம் தனது சகோதரன் அனுப்பிய வீடியோவை பதிவை மலேசியாவில் உள்ள மலேசிய உலக மனித நேய அமைப்பின் தலைவர் கமலநாதன் என்பவருக்கு அனுப்பி உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து கமலநாதன் ஜாகீர் உசேனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். இது தொடர்பான செய்தி மலேசிய ஊடகங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது.
சேலத்தில் ஜாகீர் உசேனின் சகோதரர் சதாம் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறியதாவது