தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளிப் பொருள்களுக்கு இரட்டை ஜிஎஸ்டி: திரும்பப்பெற கோரிக்கை - Request for repeal of double GST on silver items from Salem silver clasp traders and manufacturers demand

வெள்ளிப் பொருள்களுக்கு உள்ள இரட்டை ஜிஎஸ்டி முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனச் சேலம் வெள்ளிக் கொலுசு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வெள்ளி பொருட்களுக்கு உள்ள இரட்டை ஜிஎஸ்டி முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்
வெள்ளி பொருட்களுக்கு உள்ள இரட்டை ஜிஎஸ்டி முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்

By

Published : Jan 1, 2022, 6:21 AM IST

சேலம்:வெள்ளிக் கொலுசு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த அலுவலகத்தினை சூரமங்கலம் காவல் உதவிஆணையர் நாகராஜ், சேலம் நகர காவல் உதவி ஆணையர் வெங்கடேஷன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறைவெள்ளிக் கொலுசு வியாபாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று பேசினர். மேலும், காவல் உதவி ஆணையருக்கு வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா

அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பஷீர் கூறுகையில், "மத்திய அரசு வெள்ளிக்கொலுசு, வெள்ளிப் பொருள்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

தற்பொழுது, மூல வெள்ளிப் பொருள்களுக்கும் கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்களுக்கும் இரட்டை ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது.

வெள்ளிப் பொருள்களுக்கு இரட்டை ஜிஎஸ்டி வரி விதிப்பு: திரும்பப்பெற கோரிக்கை

இதனால் வெள்ளி தொழில் செய்ய முடியாமல் அதிக நபர்கள் கட்டட வேலைக்கும், பல்வேறு கூலி வேலைகளுக்கும் சென்றுவிட்டனர். எனவே மத்திய அரசு இரட்டை ஜிஎஸ்டி முறையைக் கைவிட்டு வெள்ளிப் பொருள்களுக்கு ஒற்றை ஜிஎஸ்டி முறையை நடைமுறைப்படுத்தினால் வெள்ளி தொழில் காப்பாற்றப்படும்.

இந்தத் தொழிலை நம்பி சேலம் மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.

மேலும், வெள்ளி கொண்டுசெல்லும் தொழிலாளர்களைச் சந்தேகத்துடன் பார்க்கும் முறையைக் கைவிட வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வெள்ளித் தொழிலாளர்கள் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்

இதையும் படிங்க: 'ஆட்சியைப் பிடிக்க வேண்டியதில்லை; எங்களைக் கேட்டுதான் ஆட்சி நடக்கும்'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details